உங்கள் உடல் ஆரோக்யமாக
ஒரு வழி சொல்லவா என்கிறார் தமிழ் செல்வன்
இதை அவர் கடை பிடிக்கிறார் அதை
மற்றவர்களும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.
வார விடுமுறையில் தன்
நண்பர்களுடன் இயற்கை விவசாயம் செய்யும் தோழர்களுடன் சேர்ந்து தானும் விவசாயத்தில்
ஈடு படுகிறார், இவர் இவ்வாறு செய்வதன் மூலம் வாரத்தில் ஒரு நாள் முழுவதும்
சுத்தமான பிராணவாயுவை சுவாசிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது,
மேலும் சுத்தமான
நீர், உணவு, அதிகமான வியர்வை உடலை விட்டு வெளியேறுகிறது என்கிறார், இதன் மூலம்
இவர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதுடன் உடல் ஆரோக்கியம் பெறுகிறது
என்பதை கூறும் இவர் நீங்கள் ஜிம்க்கு போய் செய்யும் அனைத்து உடற்பயிற்சிகளும்
விவசாயம் செயும்போது நிச்சயம் கிடைக்கும் என்று மிகுந்த புத்துணர்ச்சியுடன்
பகிர்ந்து கொண்டார்.
இன்றைய உணவு முறையில்
ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் நம்மிடம் பகிர்ந்தவர் உங்களுக்கும் இது போல் ஒரு
அனுபவம் தேவை என்றால் உங்கள் நகரத்தின் அருகமையில் உள்ள விவசாய தோழர்களுடன்
சேர்ந்து விவசாயம் செயுங்கள் என்கிறார்.
பணத்தை மட்டும் குறிகோளாக வைத்து சுற்றும்
இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தை தனது குறிகோளாக கொண்டு சுற்றும் ஒரு
இயற்கையார்...
முகநூல்பத்திரிகைக்காக
சென்னையில் இருந்து ஒளிபதிவாளர் மதிவானனுடன் மகிழம்படி வசந்தபாலா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக